ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: ஒன்பது இந்து யாத்திரிகர்கள் பலி!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் குறைந்தது ஒன்பது இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்ததாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வலுவாக இல்லை என்பதை இத்தாக்குதல் காட்டுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கரிஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“பயங்கரவாதிகள் பேருந்தைச் சுற்றி வளைத்தனர். அதை நோக்கி அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்,” என்று ஜம்மு காவல்துறை உயர் அதிகாரி மொஹித்தா ஷர்மா தெரிவித்தார்.
காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.