அமெரிக்கா, வெனிசூலா இடையே அதிகரிக்கும் பதற்றம் – போருக்குத் தயார் படுத்தும் வெனிசூலா இராணுவம்
அமெரிக்காவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வெனிசூலா இராணுவம் தங்கள் நாட்டு மக்களை போருக்குத் தயார் படுத்தும் விதமாக ஆயுதப் பயிற்சி அளித்தது.
ரைபிள்கள் மட்டுமின்றி விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய டர்ரெட் ரக துப்பாக்கியையும் இயக்க தன்னார்வளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வெனிசூலாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி, வெனிசூலா நாட்டு படகுகள் மீது அண்மையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாலேயே படகுகள் தாக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.





