ஆசியா செய்தி

மலேசியா விமான நிலையத்தில் பதற்றம் – துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்

மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அந்தச் சம்பவம் இரவு 1.30 மணியளவு முனையம் ஒன்றின் வருகை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

சிலாங்கூர் (Selangor) மாநிலத்தின் காவல்துறை தலைவர் அந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சந்தேக நபர் இருமுறை சுட்டிருக்கிறார். அவற்றில் ஒரு தோட்டா உள்ளூரைச் சேர்ந்த தனிப்பட்ட பாதுகாவலரைத் தாக்கியது.

அதற்கு பிறகு சந்தேக நபர் தப்பினார். பாதிக்கப்பட்டவருக்குக் கடும் காயம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய பிறகு சந்தேக நபர் தம்முடைய மனைவியைச் சுட எண்ணியதாகத் தெரியவந்தது.

சந்தேக நபரின் மனைவி உம்ரா புனித யாத்திரைக்குச் சென்றோரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் காரணம் இன்னும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!