பிரான்ஸில் பல்லாயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
பிரான்ஸில் அண்மைக்காலமாக குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த குழந்தைகள் அவசரப் பிரிவிலேயே அனுமதிக்க படுவதாக சுகாதாரம் அமைச்சு அறிவித்துள்ளது.
வேறுபாடுகள் இன்றி சுமார் 39 000 மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆண்டொன்றுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள், புறநகரங்கள் எனும் வேறுபாடு இன்றி சுவாசக் காற்று எங்கும் மாசுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
சுமார் 11,000 மூன்று வயது குழந்தைகள் ஆஸ்துமாவுக்காகவும், 28,000 குழந்தைகள் மூச்சுக்குழாய் அழற்சிக்காகவும் அவசரமாக அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.





