துருக்கி காட்டுத்தீ தொடர்பாக பத்து சந்தேக நபர்கள் கைது

கடந்த வாரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக துருக்கிய அதிகாரிகள் பத்து சந்தேக நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
மேற்கு கடலோர மாகாணமான இஸ்மிரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீ வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்தன.
ஜூன் 26 முதல் ஏற்பட்ட 65 தீ விபத்துகளில் சில, வனப்பகுதிக்கு அருகில் வெல்டிங் மற்றும் விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவதாலும், தோட்டக் கழிவுகளை எரிப்பதாலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)