இங்கிலாந்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிப்பு
இங்கிலாந்தில் 2025-ஆம் ஆண்டு நிலவிய கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, புல்வெளிகள் மற்றும் காடுகளில் சுமார் 27,000 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, கடந்த வசந்த காலத்தில் மட்டும் தீ விபத்துகள் முந்தைய ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளன.
டார்செட், வில்ட்ஷயர் உள்ளிட்ட பத்து தீயணைப்பு நிலையங்கள் தங்கள் வரலாற்றிலேயே அதிகபட்ச பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன.
100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், சிகரெட் துண்டுகள் மற்றும் பார்பிக்யூ அடுப்புகளை முறையாக அணைக்காததே பல விபத்துகளுக்குக் காரணம் என எச்சரித்துள்ளனர்.





