ஆசியா

வியட்நாமை உலுக்கும் வெப்பநிலை – வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை

வியட்நாமில் வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியிருப்பதனால் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

நேற்று முன்தினத் தான் ஹோ (Thanh Hoa) வட்டாரத்தில் வெப்பநிலை 44.1 பாகை செல்சியஸாகப் பதிவாகியது.

இதற்கு முன் அந்தப் பகுதியில் பதிவான ஆக அதிக வெப்பநிலை 43.4 பாகை செல்சியஸாகும்.

இதுபோன்ற வெப்பநிலை மீண்டும் மீண்டும் பதிவாகக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக வியட்நாமைச் சேர்ந்த பருவநிலை மாற்ற நிபுணர் குறிப்பிட்டார்.

வியட்நாமில் கோடைக்காலம் தொடங்குகிறது. அது இன்னும் ஆக அதிக வெப்பமான மாதங்களை எதிர்நோக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வெப்பம் அதிகமாக இருக்கும் வேளைகளில் உள்புறங்களில் இருக்குமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

வெப்பம், வறட்சி ஏற்படும் சாத்தியம், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியவற்றை இணைத்துப் பார்த்து, நிலைமையைக் கையாளும்படி வியட்நாமின் வர்த்தக, மின்சார அமைச்சுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

உள்ளூர் பயன்பாட்டிற்குப் போதுமான அளவு தண்ணீர் இருப்பதும் உறுதி செய்யப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்