இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

தனது விந்தணுவில் பிறந்த 106 குழந்தைகளுக்கு சொத்தை பிரித்த டெலிகிராம் நிறுவனர்

பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் CEO பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷிய நாட்டவரான இவர் துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார்.

தனது விந்தணு தானத்தின் மூலம் உலகம் முழுவதும் 12 நாடுகளில் 100 பேர் பிறந்ததாக பரபரப்பான அறிவிப்பை சில காலம் முன் பாவெல் துரோவ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது சொத்துக்கள் தனது அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிப்பதாக பாவெல் அறிவித்துள்ளார். இதற்காக சமீபத்தில் ஒரு உயில் எழுதியுள்ளதாகவும் பாவெல் தெரிவித்தார்.

பாவெல் வெளிப்படுத்திய விவரங்களின்படி, அவர் திருமணமாகவில்லை என்றாலும், அவர் மூன்று பெண்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இந்த ஆறு பேரைத் தவிர, விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கும் அவர் தந்தையானார். அனைவரும் தனக்கு சமம் என்றும், யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதனால்தான் அவர்கள் அனைவருக்கும் தனது சொத்தில் சம பங்கு இருக்கும் என்று பாவெல் கூறினார். தனது வாழ்க்கை சவால்களால் நிறைந்தது என்று கூறும் 40 வயதான பாவெல் தனது உயிலை எழுதியுள்ளார்.

இருப்பினும், பாவெலின் முழு சொத்தும் ஒரே இரவில் அவரது குழந்தைகளுக்குச் செல்லாது என்றும் வாழ்க்கையில் அவர்கள் பட்டறிவு பெறவேண்டும் என்பதால் உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுசொத்து குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார். அதாவது

அவரது சொத்துக்கள் 2055, ஜூன் 19 அன்று அவரது 106 குழந்தைகளுக்கு பிரிந்து வழங்கப்படும்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி