பின்லாந்து கடற்பகுதியில் தொலைத்தொடர்பு கேபிளில் சேதம் – கைப்பற்றப்பட்ட கப்பல்!
பின்லாந்து வளைகுடாவில் கடலுக்கடியில் நேற்று தொலைத்தொடர்பு கேபிளில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பலை பின்லாந்து அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்ததாக எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்லாந்தின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் அக்கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
ஹெல்சின்கி (Helsinki) காவல்துறையினர் மோசமான குற்றவியல் சேதம், குற்றவியல் சேத முயற்சி மற்றும் தொலைத்தொடர்புகளில் மோசமான குறுக்கீடு என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள பின்லாந்து ஜனாதிபதி, “பல்வேறு வகையான பாதுகாப்பு சவால்களுக்கு பின்லாந்து தயாராக உள்ளது. மேலும் நாங்கள் அவற்றுக்குத் தேவையானபடி பதிலளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





