தொழில்நுட்பக் கோளாறு!! பிரித்தானியாவில் விமான சேவையில் தடங்கள்
ஐக்கிய இராச்சியத்தில் விமான சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், விமானங்கள் தாமதமாகலாம் என பிரித்தானிய தேசிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, “தொழில்நுட்ப சிக்கலை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், திங்கள்கிழமை விமானங்களின் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என பிரிட்டனின் தேசிய விமானப் போக்குவரத்து சேவை (NATS) தெரிவித்துள்ளது.
“நாங்கள் தற்போது தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்கிறோம், பாதுகாப்பை பராமரிக்க போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. பொறியாளர்கள் சிக்கலைக் கண்டுபிடித்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்…” என்று அதிகாரிகள் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
அதன்படி, பரபரப்பான சுற்றுலா தினத்தில் புறப்படக் காத்திருக்கும் பல பயணிகள் தங்கள் சமூக ஊடகங்களில் விமானங்களுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பாரிய கணினி கோளாறு காரணமாக இங்கிலாந்தில் உள்ள அனைத்து வான்வெளிகளும் மூடப்பட்டு 8-12 மணி நேரம் தாமதத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.