டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு – பல விமானங்கள் தாமதம்!
டெல்லி விமான நிலையத்தில் இன்று 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு செய்தியிடல் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக விமான தாமதங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விமான புறப்பாடுகள் 30 நிமிடங்கள் தாதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் எதிரொலித்ததாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தின் பங்குகள் 1.5 சதவீதம் சரிந்தன. ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) மற்றும் ஏர் இந்தியாவும் ( Air India) தாமதங்கள் குறித்து எச்சரித்துள்ளன.
தொழில்நுட்ப கோளாறுகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)




