தொழில்நுட்ப கோளாறு : இங்கிலாந்து விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
பார்படோஸின்(Barbados) பிரிட்ஜ்டவுனில் (Bridgetown) இருந்து மென்செஸ்டருக்குச் (Manchester) சென்ற ஏர் லிங்கஸ் (Aer Lingus) விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்டதும், அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மென்செஸ்டர் விமான நிலையம் உறுதிப்படுத்தியது.
நீண்ட தூர வழித்தடங்களை இயக்கும் ஏர் லிங்கஸ் அதன் மென்செஸ்டர் மையத்தை மூடுவது குறித்து பரிசீலித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்படி மென்செஸ்டர் மையம் மூடப்படுவதால் சுமார் 200 பேர் வேலை இழப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





