ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
ரஷ்யாவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உரல் ஏர்லைன்ஸ் ஒரு ரஷ்ய உள்நாட்டு விமான நிறுவனம். இது யெகாடெரின்பர்க் நகரத்தில் இருந்து செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏ320’ விமானம் சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் இருந்து சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
அதில் 167 பேர் பயணித்துள்ளனர். நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு வந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.. அதை விமானி கவனித்த நிலையில் விமானம் உடனடியாக கமென்கா கிராமத்திற்கு அருகிலுள்ள வயல்களில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது, ஆனால் அதன் சில பாகங்கள் சேதமடைந்துள்ளன. தரையிறக்கம் வனப்பகுதிக்கு அருகில் இருந்ததால், உடனடியாக பயணிகளை கிராமத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
விமானம் வயல்வெளியில் தரையிறங்கும் புகைப்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். பயணிகளுக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை மீறியதை அடுத்து, ரஷ்ய புலனாய்வுக் குழு இந்த சம்பவத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று குழு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பின் விளைவாக மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான உதிரி பாகங்கள் வழங்குவதும் கடினமாகிவிட்டது.