இலங்கை

இலங்கையில் கலா மாஸ்டருக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சியின் சில பகுதிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்த நிலையில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஆங்காங்கே ஓட்டப்பட்டுள்ளன.

குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குஷ்பு, கலா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு காட்டப்பட்டு வந்தது.

குஷ்பு பங்கேற்காத நிலையில் கலா மாஸ்டரே இசை நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!