வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது – மகிழ்ச்சியில் ட்ரம்ப்

உலக நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு பெரும் வருமானம் ஏற்படுகிறது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“நீதிமன்றம் இந்த வரி விதிப்புகளை தடை செய்தால், இப்பெரும் தொகைகளை மீண்டும் பெற அமெரிக்காவிற்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது” என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், வரலாற்றில் என்னை போன்று சோதனைகளையும் இன்னல்களையும் கடந்து வந்த ஒருவர் யாரும் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி போக்குகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் அதற்கான நீதிமன்ற முடிவுகள் தற்போது நாட்டில் பெரும் விவாதமாக உள்ளன.
(Visited 8 times, 8 visits today)