அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது தரங்கிணி கப்பல்!
இந்திய கடற்படையின் பயிற்சி கப்பலான INS தரங்கிணி இன்று (27) பயிற்சிகளுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபையின் அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.
அஷ்ரப் துறை முகத்துக்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை உறவுகளை வலுப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிக் கப்பல் வருகை தந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மார்ச் 02 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் 06 முதல் 09 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் நங்கூரமிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் மாலுமிகளுக்கு பல பயிற்சிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், துறைமுக கட்டத்திலும் கடல் கட்டத்திலும் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது

இலங்கை கடற்படையின் கடற்படை மற்றும் கடல்சார் அறிவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் குழு இன்று (27) பயிற்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக இந்தக் கப்பலின் கண்காணிப்பிலும், பயிற்சியிலும் பங்கேற்றது.
இந்தியக் கப்பலான தரங்கினியைச் சேர்ந்த லெப்டினன்ட் அனுஷீல் குமார் வருகையின் நோக்கம் பற்றி விளக்கம் அளித்ததுடன் இந்தப் பயிற்சி பாய்மரக் கப்பலின் செயல்பாடு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் திறன் அமைப்பு குறித்தும் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் கஜ்ஜார் விளக்கினார்.

குறித்த கப்பல் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் கோவா மாநிலத்தில் நிறுவப்பட்ட கோவா கப்பல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




