இலங்கை செய்தி

தமிழ் மக்கள் அரசியல் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்

கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இருந்தவர்களை புறம் தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்பு தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கி உள்ளோம்.

இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகின்றது.

தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும். என்ற எண்ணத்தோடு உள்ளார்கள்.

அதனால், தென்னிலங்கையில் இருக்கு கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகி உள்ளனர். ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேராவவுடன் கணபப்டுகிறனர்.

வடக்கில் எமது கட்சி தலைவர் சி . வி விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார்.

மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாஎ நாடாளுமன்றில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் ஆசைப்படுகின்றனர்.

See also  இலங்கையில் மோசமான காலநிலை - கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

கடந்த காலங்களில் இருந்தவர்களை ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம்.

தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும்.

நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காது , செயற்படுவோம்.

தமிழ் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்.

இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்கு தேவையானது.  நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்து செல்வோம்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம்.

அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்து சென்ற அதேவேளை , பொருளாதாரத்தையும் முன்னெடுத்து சென்றோம்

நாம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த கால பகுதியில் தான் கொரோனா தொற்றும் அதனை தொடர்ந்து , பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. அவ்வாறான இடரான கால பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டோம்.

See also  இலங்கை: ஓய்வூதியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

நாடு தற்போதும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன் தான் காணப்படுகின்றன.

எனவே தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் அக் கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி உமாகரன் இராசையா கருத்து தெரிவிக்கும் போது,

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கைவிட்டு விட்டு , பொருளாதாரத்தை நோக்கி செல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து செல்லும் போது தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.

ஆனால் அவர்களிடம் அரசியல் பலம் அன்று இருக்கவில்லை. பின்னரான கால பகுதியில் தமிழர்களிடம் கல்வியுடன் பொருளாதர பலமும் காணப்பட்டது.

அப்போதும் அவர்களிடம் அரசியல் பலம் இல்லாததால் தான் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.

தற்போதும் எமக்கான அரசியல் பலம் போதாது. எமக்கான தனித்துவமான அரசியல் பலம் வேண்டும்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்தும் இலட்ச கணக்கான மக்களைஇழந்து ரில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம்.

See also  460 சீனப் பிரஜைகளிடம் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணை!

அப்பேற்பட்ட நிலையில் எங்கள் இலட்சியங்களை தூக்கி ஏறிய முடியாது.  தற்போதைய அரசாங்கம் இனவாதம் பேசவில்லை என கூறுகின்றார்கள். ஆனால் அடுத்து வருவோர்களும் அவ்வாறு இருப்பார்கள் என்றில்லை.

மீண்டுமொரு இனக்கலவரமோ , தனி சிங்கள சட்டமோ கொண்டு வரப்பட்டால் நாம் எமக்கான தனித்துவமான அரசியல் பலம் இல்லாது அதனை எவ்வாறு கையாளுவது ?

ஆகவே மாற்றத்தை விரும்புவோர் எமக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content