இலங்கை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்! சிவநேசத்துரை சந்திரகாந்தன்

அரசியல் இல்லாமல் சமூகத்தை கட்டி எழுப்ப முடியாது- சமூகத்திற்காக பணியாற்றக் கூடியவர்களை இப்போதே கண்டுபிடித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்

திருகோணமலை கிரீன் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று (27) கட்சி உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில், ”ஒருவர் அரசியலுக்கு வரும்போது கட்சியின் கொள்கைகளை அறிந்திருக்க வேண்டும். மாகாண சபை முறைகளை அறிந்திருக்க வேண்டும். சர்வ கட்சி கூட்டம் ஏன் நடந்தது. கிழக்கு மாகாண சபையில் விட்ட விலை என்ன போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் அப்படி அறிந்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும்.

கரண்ட் போனால் ஜெனியை கொடுத்தால் லைக் பத்தும் என தெரிந்திருக்க வேண்டும். அதே போல தான் அரசியலுக்கு அவர் படித்து வரும்போது மாகாண சபை முடிந்து விடும். அந்த நேரம் சொல்லுவார்கள் முதல் தடவை தானே நாங்கள் சென்றோம் இரண்டாவது தடவை பார்ப்போம் என கூறுவார்கள்.

அப்படியானவர்கள் அரசியலுக்குத் தேவையில்லை. சிறந்த சமூக உணர்வுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சில செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும்” என குறிப்பிட்டார்.

இதன் போது கட்சியின் செயலாளர் பொருளாளர் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் பிரதேச இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்