இந்தியா செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

PNS பிரிவு 109ன் படி கொலைக்குச் சமமில்லாத குற்றவியல் மரணம் விளைவித்தல், பிரிவு 110ன் கீழ் குற்றவியல் மரணம் விளைவிக்க முயற்சித்தல், பிரிவு 125ன் படி மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல், பிரிவு 223ன்படி அரசு அதிகாரியால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை போன்ற பிரிவின் கீழ் ஐவர் மீது இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவத்தின் முதல் குற்றவாளியாக மதியழகன் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனிப்படை பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தையும் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை தவெக தலைவர் விஜய்யின் பெயர் நேரடியாக குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை. அதேநேரம் தவெக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி