ஐரோப்பா

துருக்கியில் மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தை : 6000 கைதிகள் பரிமாற்றம்!

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

ரஷியாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ” போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்” என்றார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!