ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க குடிமகன் அமீர் அமிரியை விடுவித்த தலிபான்
டிசம்பர் முதல் ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அமெரிக்க குடிமகன் கத்தார் மத்தியஸ்தம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு மீண்டும் சென்ற அமீர் அமிரியின் விடுதலை, ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட ஐந்தாவது அமெரிக்க குடிமகன் ஆவார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அமிரியின் விடுதலையை வரவேற்றார், இது அமெரிக்க குடிமக்களை வெளிநாடுகளில் தவறான தடுப்புக்காவலில் இருந்து பாதுகாக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதியைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“இது ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கும் அதே வேளையில், மேலும் பல அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.





