தைவான் கத்தி குத்து சம்பவம் – ஒரு வருடம் காத்திருந்த தாக்குதல்தாரி!
தைவானின் தலைநகரில் மூன்று பேர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் குறித்த பல முக்கிய தகவல்களை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய சந்தேகநபர் ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே இந்தத் தாக்குதலை கவனமாகத் திட்டமிட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதான சாங் வென் (Chang Wen) என அடையாளம் காணப்பட்ட தாக்குதல்தாரி, தைபே மெட்ரோ நிலையத்திலும் தெருவிலும் வழிப்போக்கர்களைக் கத்தியால் குத்தி, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் தாக்குதல்தாரி ஒரு பல்பொருள் அங்காடியின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தைவானை உலுக்கியுள்ள நிலையில், தற்போது காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.





