டிக்டொக்கை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதும் தைவான்!
தைவானின் டிஜிட்டல் விவகார அமைச்சர் ஆட்ரி டாங், சீனாவை தளமாக கொண்டு இயங்கும் TikTok ஐ தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக விவரித்துள்ளார்.
வெளிநாட்டு எதிரிகளுடனான தளத்தின் தொடர்பு அமெரிக்காவின் முன்னோக்குடன் ஒத்துப்போகிறது என்று டாங் வலியுறுத்தினார்.
தைவானின் தரநிலைகளின்படி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வெளிநாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு தயாரிப்பும் தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸை குறிவைத்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)