வருடாந்திரப் போர்ப் பயிற்சிகளைத் தொடங்கிய தைவான்…
தைவான் அதன் வருடாந்திர ஹான் குவாங் போர்ப் பயிற்சிகளை ஜூலை 22ஆம் திகதியன்று தொடங்கியது.
சீனா தன்மீது தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் இலக்குடன் தைவான் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானை அதன் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.ஆனால் தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாகப் பார்க்கிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தைவானுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் சீனா அத்தீவைச் சுற்றி பல போர்ப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.இதற்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இம்முறை தைவான் நடத்தும் போர்ப் பயிற்சிகளில் வழக்கம் போல இருக்கும் சில அம்சங்கள் இருக்காது.போர்க்கால சூழலை முடிந்த அளவுக்குத் துல்லியமாகப் பின்பற்றி போர்ப் பயிற்சிகள் அமைக்கப்படும் என்று தைவான் கூறியது.
இரவுநேரப் பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.போர்ப் பயிற்சிகள் தைவானின் வடக்குப் பகுதியில் உள்ள தாவ்யுவேன் நகரில் தொடங்குகிறது.அங்குதான் தைவானின் பிரதான அனைத்துலக விமான நிலையம் உள்ளது.
ர்ப் பயிற்சியில் ஈடுபட போர்க்காலத் தயார்நிலை ராணுவ வீரர்கள் அந்நகரில் திரண்டுள்ளனர்.போர்ப் பயிற்சிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய பொதுமக்களுக்குச் சொந்தமான வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தலைநகர் தைப்பேயில் உள்ள முக்கிய துறைமுகம் ஒன்றைத் தற்காப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.