அரசியல் இலங்கை கல்வி

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இளைய மகனுக்கு மறியல்!

  • January 5, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

error: Content is protected !!