செய்தி விளையாட்டு

T20 WC – பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய நியூசிலாந்து

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இன்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவுடன்(சி பிரிவு) மோதியது.

மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது.

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்தது.

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவம் இல்லாத பப்புவா நியூ கினியா அணி, வலுவானை நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க திணறியது.

நியூசிலாந்தில் அபார பந்துவீச்சால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை.

இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் இலக்கை கடந்தது.

இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு விலகியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!