முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள சிரிய ஜனாதிபதி

சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா (Ahmad al-Sharaa) 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (15) ரஷ்யா சென்றடைந்துள்ளார்.
அஹ்மத் அல்-ஷாரா தனது பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.
சிரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
இதில் இரு நாடுகளின் பொதுநலன்களை ஆதரிக்கக்கூடிய பல்துறைத் திட்டங்கள், பொருளாதார உடன்படிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகள் போன்றவை முக்கியமாகப் பரிசீலிக்கப்பட்டவை என சிரிய அரபு செய்தி நிறுவனம் (SANA) தெரிவித்துள்ளது.
மேலும், இரு நாடுகளின் பகிர்ந்த நலன்களை மேம்படுத்துவதற்காக கல்வி, ஒளிபரப்புத்துறை, அதிகரித்த வர்த்தக இணைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் போன்ற பிரிவுகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் இணைந்த முயற்சிகள் குறித்து கவனமாகத் திட்டமிடப்படும் என்றும் SANA செய்தி குறிப்பிட்டுள்ளது.