இலங்கை

வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக சுவிஸ் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தின் பிரபல அரசியல்வாதியான கிறிஸ்டோபர் புளொச்சர் வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 15,000 சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு இவ்வாறு கையூட்டல் வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் குறித்த அரசியல்வாதி ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங்குகளை முதலீடு செய்திருந்தார் என ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு நிதி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலீட்டு முறைமை ஒன்றின் மூலம் எந்தவொரு சுவிட்சர்லாந்து பிரஜையும் இந்த முதலீட்டு திட்டத்தின் ஊடாக நன்மை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஒரே நாளில் 5500 சுவிஸ் பிராங்களை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு செயற்பாடு தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என அரசியல் நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்