சுவிஸ் நேஷனல் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை குறைத்துள்ளது!
சுவிஸ் நேஷனல் வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த வட்டி வீத குறைப்பானது நாளை முதல் அமுலுக்கு வருகிறது. குறித்த வட்டி விகிதமானது, 1.5% ஆக குறைக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
“கடந்த இரண்டரை ஆண்டுகளில் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக இருந்ததால் எங்கள் பணவியல் கொள்கையை தளர்த்துவது சாத்தியமானது” என்று SNB தலைவர் தாமஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜூன் மற்றும் செப்டம்பரில் கூடுதல் கட்டணக் குறைப்புகளை எதிர்பார்க்கிறோம் என்று ஐஎன்ஜி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.





