குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க சுவிஸ் உள்துறை அமைச்சர் பரிந்துரை
சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சுவிட்சர்லாந்து(Switzerland) இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர்(Elisabeth Baum-Schneide) குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின்(Australia) 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து இதே போன்ற நடவடிக்கைகளை ஆராய வேண்டும் என்று பாம்-ஷ்னைடர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், சுவிஸ் மாகாணமான பிரிபெர்க்(Fribourg), 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்துவதைத் தடை செய்ய வாக்களித்தது.
இது பாடசாலைகளில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க சுவிட்சர்லாந்தில் உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கையாகும்.





