சுவிஸ் வெடி விபத்து – பிரித்தானியர்கள் உதவி பெற விசேட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!
சுவிஸில் ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரஜைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக பெர்னில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இங்கிலாந்து வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) நடந்த பயங்கரமான சம்பவத்தில், காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரித்தானியருக்கும் ஆதரவளிக்க தூதரக ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் பிரித்தானியர்கள் + 44 (0) 20 7008 5000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





