நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராகிய ஸ்வீடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது.
ஸ்வீடன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர விண்ணப்பித்திருந்தது. விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேட்டோ இன்று முன்னரை விட வலுவாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ இன்னும் ஒன்றுபட்ட, உறுதியான மற்றும் ஆற்றல் மிக்கதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது புதிய நட்பு நாடான ஸ்வீடனுடன் சேர்ந்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக எதிர்வரும்; தலைமுறைகளுக்காக நேட்டோ தொடர்ந்து நிற்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 24 times, 1 visits today)