சந்தேகம் காரணமாக ரைஸ் குக்கரால் தாக்கி காதலியை கொலை செய்த காதலன்

சந்தேகம் காரணமாக காதலன் காதலியை கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பதிவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் வாடகை வீட்டில் நீண்ட நாட்களாக காதலர்களாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையே எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டது.
குறித்த காதலன் காதலிக்கு வேறு உறவுகள் இருப்பதாக சந்தேகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் கடும் கோபமடைந்த காதலன் ரைஸ் குக்கரால் தாக்கியதாகவும் தகவல்கன் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் பலத்த காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றிய 24 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
எனினும் குறித்த காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 3 times, 1 visits today)