இலங்கை செய்தி

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இடைநிறுத்தம்

எதிர்வரும் LPL போட்டியில் பங்குபற்றவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது.

LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LPL ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அனில் மோகன் தெரிவித்தார்.

இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிம் ரஹ்மான் எதிர்கொள்ளும் சட்ட விடயங்களை கருத்திற்கொண்டு மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஎல் போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை வேறு தரப்பினர் பெற்று கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய உரிமையின் கீழ் தம்புள்ளை அணி எல்பிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என தெரிவிக்கப்பட்டது.

2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்கான யோசனையை முன்வைக்க முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை