யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தில் நடைபெற்ற சூரியப்பொங்கல்

யாழ்ப்பாணம் துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தில் தைப் பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றையதினம் மிக சிறப்பாக நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் இன்று காலை பொங்கல் நிகழ்வுகள் ஆலய பங்கு மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் தமிழர் திருநாளை கொண்டாடும் முகமாகவும், சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் முகமாகவும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இதேவேளை ஆலயத்தில் முட்டி உடைத்தல், மற்றும் கயிறு இழுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
(Visited 14 times, 1 visits today)