பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா விடுத்த கோரிக்கை..!
இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் ‘7’ -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல ’45’& ’18’ என்ற ஜெர்ஸி எண்ணிற்கும் ஓய்வை அறிவிக்க வேண்டுமென சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.
நடப்பாண்டில் நடைபெற்று வந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் 4 நாட்களாக கொண்டாடி வந்தனர். மேலும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த வெற்றியை குறித்து அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவில் பேசிய போது ஒரு சில கருத்தை முன்வைத்தார். அதில் ரோஹித் ஷர்மாவின் ஜெர்ஸி எண்ணான ’45’ -க்கும், விராட் கோலியின் ஜெர்ஸி எண்ணான ’18’-க்கும் ஓய்வை அறிவிக்க வேண்டுமென கூறி இருப்பார்.
அவர் பேசுகையில், “எண் ’18’ மற்றும் எண் ’45’ ஜெர்சிகளுக்கு ஓய்வு அளிக்குமாறு பிசிசிஐ-யை கேட்டுக்கொள்கிறேன். மேலும் அலுவலகத்தில் இந்த ஜெர்சி எண்களை வைத்திருக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் வேண்டும். இதற்கு முன் எண் ‘7’ ஏற்கனவே ஓய்வு அறிவித்தது.அதே போல ’18’ மற்றும் ’45’ க்கு ஓய்வை அறிவிக்க வேண்டும். அந்த எண்களை பார்க்கும் போது ஒவ்வொரு நபரும் உற்சாக படுத்தவேண்டும். 18 மற்றும் 45 எண்கள் பல சூழ்நிலைகளில் இருந்து இந்திய போட்டிகளை வென்றுள்ளனர்.
எந்த ஒரு புதிய வீரர் அணியில் வந்தாலும், இந்த எண்களைப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்க வேண்டும்”, என்று கூறினார். மேலும், பிசிசிஐ ஒரு ஜெர்ஸி எண்ணுக்கு ஓய்வை அறிவித்தால் அந்த எண்ணை அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறும் எந்த ஒரு வீரரும் எடுத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.