பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடித்துக்கொண்ட கைதிகள்!
பிரித்தானியாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இருவர் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
48 நாட்கள் உணவை மறுத்த பிறகு, குசெர் சுஹ்ரா (Qesser Zuhrah) மற்றும் அமு கிப் ( Amu Gib) ஆகிய இருவருமே மேற்படி போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
கொள்ளை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குறித்த இருவரும் ஏனைய ஆறு கைதிகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மேற்படி இருவரும் சோர்வு மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்ட பிறகு போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.





