செய்தி வாழ்வியல்

கோடை காலத்தில் ஏற்படும் பக்கவாதம் – பாதுகாப்பது எப்படி?

பக்கவாதம் ஏற்பட காரணம் அதற்கான முன் அறிகுறி மற்றும் அதற்கான உணவு முறை பற்றி இப்பதிவில் காணலாம்.

பக்கவாதம்:
மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த குழாய்களில் கசிவு அல்லது கட்டிகள் ஏற்படுவதால் பக்கவாதம் உண்டாகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது இதையே பக்கவாதம் என்கிறோம்.

காரணங்கள்:
உடலில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை உயரும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது ,இதனால் உப்பு சத்து குறைபாடும் உண்டாகும் ,ஆகவே மூளை பாதிப்படையும்.

இருதய நோய் உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சனை ,உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் ,பத்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

பக்கவாதம் வர முன் அறிகுறிகள்:
வாய் குளறுதல், பார்வை திறன் மங்குதல்,ரத்த அழுத்தம் அதிகமாகி தொடர் இருமல் இருக்கும்போதும், நடக்க முடியாமல் போவது மற்றும் ஒரு பகுதி மட்டும் செயலிழந்து காணப்படுவது.

சிகிச்சை முறை:
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை மூன்று மணி நேரத்திற்குள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு ரத்த கட்டிகளை கரைக்கும் மருந்துகள் கொடுக்கப்படும் மேலும் உயர் ரத்த அழுத்தத்தை. குறைப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

பக்கவாதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்:
பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை ,இவைதான் பெரும்பாலும் மற்ற நோய்களுக்கும் முதன்மை காரணமாக இருக்கிறது. மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கார்டிசோல் ஹார்மோனை குறைப்பதற்கு நல்ல தூக்கம் அவசியமானது.

மேலும் இந்த பக்கவாதம், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு வேலையை செய்து முடித்தே ஆக வேண்டும் என்று வேலை செய்பவர்களுக்கு வர அதிக சாத்திய கூறு உள்ளது என ஆராய்ச்சி கூறுகிறது. அவ்வாறு செயல்படுவதை தவிர்க்கவும் .

உணவு முறை:
கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும் ,இதனால் நீரிழப்பு ஏற்படாமல் தடுத்து உப்புச்சத்து குறைபாட்டில் இருந்தும் பாதுகாக்கப்படும்.

ஆளி விதை
ஆளி விதையில் லிட்னன்ஸ் இருப்பதால் இது ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்கும், தினமும் 5 கிராம் அளவு பொடியாக்கி ,சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளவும்.

மாதுளை
மாதுளையில் நைட்ரிக் ஆக்சைடு மூளையில் நைட்ரிக் ஆக்ஸைடு குறைபாடை சரி செய்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸில் மெக்னீசியம் அதிகம் உள்ளது இந்த மெக்னீசியம் ஸ்ட்ரோக் ஏற்படுவதை தடுக்கும்.

தக்காளி
தக்காளியில் லைகோபின் இருப்பதால் பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்பட்டு மீண்டும் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:
இனிப்பு வகைகள், பாமாயில் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றை தவிர்த்தால் பக்கவாதம் திரும்ப வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் உடற்பயிற்சி, பிசியோதெரபி போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி