அரசியல் மாற்றத்தை விரும்பும் சுமந்திரன்
																																		அடையாளம் மாறாத அரசியல் மாற்றத்தையே தாம் விரும்புவதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 225 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். பரவலாக ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் வெவ்வேறு மொழி பேசுகின்றவர்களிலிருந்து பிரதிநிதிகள் வர வேண்டும்.
தமிழ் மக்கள் விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஒரு குறித்த நிலைப்பாட்டை நீண்ட காலமாக எடுத்திருக்கின்றார்கள். 75 ஆண்டு காலமாக எடுத்த ஒரு மாறாத நிலைப்பாடு இருக்கின்றது.
ஆனபடியால் தான் அடையாளம் மாறாத அரசியல் மாற்றத்தையே விரும்புகிறேன் எனச் சுமந்திரன் குறிப்பிட்டார்.
(Visited 6 times, 1 visits today)
                                    
        



                        
                            
