ஆப்கானிஸ்தானின் காபூலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 6 பேர் பலி, 13 பேர் காயம்

காபூல் நகரில் உள்ள காலா-உ-பக்தியார் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூர தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)