பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்!! ஆறு சீன நாட்டவர்கள் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அணை கட்டும் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சீன பொறியாளர்கள் குழு ஒன்றை நோக்கி, தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், இது ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் சீனத் தொடர்புள்ள இடங்களில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் ஆகும்.
சீனப் பிரஜைகள் பயணித்த வாகனத் தொடரணி மீது அதிவேக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் மோதியதன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுகம் மற்றும் விமானப்படை தளம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த மாநிலத்தில் சீன முதலீட்டுத் திட்டங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.





