இலங்கை

இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு? நாட்டு மக்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் வெள்ளை சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பண்டிகை காலத்தை இலக்கு வைத்து நாடு முழுவதும் பழுப்பு சீனி தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்படும் என இலங்கை சீனி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வரி அதிகரிப்பினால் சீனியின் விலை அதிகரித்தது, பின்னர் அரசாங்கம் சர்க்கரைக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தது.

அவ்வாறான பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

நாட்டில் 19,000 மெற்றிக் தொன் சீனி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில், வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, சீனி இறக்குமதியாளர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தினார்.

இறக்குமதி செய்யப்படும் சீனி கையிருப்பை 25 சென்ட் வரியில் அரசாங்கம் சுவீகரித்து லங்கா சதொச மற்றும் கூட்டுறவுகள் ஊடாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்