பிரான்ஸ் தலைநகரில் திடீர் மின்தடை – 150,000 வீடுகள் பாதிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டது.
நேற்று சனிகிழமை இரவு பரிஸ் 7 ஆம், 15 ஆம் மற்றும் 16 ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த பல பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 150,000 பேர் இந்த மின் தடையை சந்தித்தனர். மின் வழங்குனர்களான Enedis இது தொடர்பில் தெரிவிக்கையில், ”மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டது ” என குறிப்பிட்டனர்.
உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
(Visited 13 times, 1 visits today)