இலங்கையில் உள்நாட்டுப் பெயரில் தரமற்ற அரிசி – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியின் வர்த்தக நாமம் அடங்கிய பொதிகளில் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த அரிசி விற்பனை செய்யப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சோதனையிட்ட போது தரம் குறைந்த அரிசி விற்பனை செய்யப்பட்டமை தெரிய வந்தது.
இந்த வர்த்தக நிலையம் சீல் வைத்து மூடப்பட்டதோடு, வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.





