இலங்கையில் நவம்பர் மாதம் முதல் முற்றாகத் தடை செய்யப்படும் பொருள்
இலங்கையில் எதிர்காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இலவசமாக வழங்கப்படாத பொலித்தீன் கொள்கலன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையைப் பற்றுச்சீட்டில் குறிப்பிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அடர்த்தியான பொலித்தீன் பைகள் மற்றும் அடர்த்தி குறைந்த பொலித்தீன் பைகள் ஆகியவற்றிற்கான விலைகளும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்தநிலையில் வட மாகாணத்தில் லஞ்ச் சீட்டிற்கு பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





