இலங்கை கல்வி முறையால் மாணவர்கள் அழுத்தத்தில் – பிரதமர் முக்கிய தீர்மானம்

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தம் என்பதுஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக அமையாத கல்வி முறைமையை உருவாக்குவது தமது அரசியல் இயக்கத்தினுள் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட ஒரு விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
பரீட்சைகளை மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறைமையினால் சிறார்கள் மீது அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனால், பெற்றோருக்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் போட்டித் தன்மையால் உருவாகி இருக்கும் தீமையான சமூக விளைவுகள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.