ஆசியா

சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – மீறினால் 30 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை அதிக அளவு வைத்திருந்தால் இனி அதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் அதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 21 அன்று நிறைவேற்றப்பட்ட “போதைப்பொருள் சட்டம் திருத்த மசோதா” அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வருகிறது.

பழைய நடைமுறைப்படி, ​​போதைப்பொருளை வைத்திருந்தால் (எடையைப் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்) 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

திருத்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பான சட்டத்தின்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் தடைசெய்யப்பட்ட குறிப்பிட்ட வகை போதை பொருட்களுக்கான தண்டனைகளை அதிகரிக்கப்படும்.

தண்டனை உயர்த்தப்படும் குறிப்பிட்ட போதை பொருட்கள்:
மார்பின், டயமார்ஃபின், அபின், கோகோயின், கன்ஞ்சா, கன்ஞ்சா பிசின் வகை, கன்ஞ்சா கலவை, மெத்தம்பேட்டமைன், மேற்கண்ட எட்டு வகை போதைப் பொருட்களை வைத்திருந்தால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15 பிரம்படிகளும் தண்டனையாக இனி விதிக்கப்படும்.

திருத்தப்பட்ட சட்டத்தின்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்