வியட்னாமில் கரையை கடந்த புயல் – தொடரும் மழைவீழ்ச்சியால் பெருக்கெடுத்த வெள்ளம்!

வியட்நாமில் ஒரு வெப்பமண்டல புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகரில் உள்ள தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, விளம்பரப் பலகைகள் அடித்துச் செல்லப்பட்டன, மின் கம்பங்கள் மற்றும் மரங்களை இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறத.
இதன்காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு தடை அமுற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தாய்லாந்திலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)