நோர்டிக் நாடுகளில் வீசும் புயல் – சுவீடனில் மின்துண்டிப்பு!!
நோர்டிக் நாடுகளில் வீசிய சக்திவாய்ந்த குளிர்காலப் புயலால் சுவீடனில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோஹன்னஸ் (Johannes) புயல் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்குப் பகுதியின் பெரும்பகுதியில் பலத்த காற்று வீசும் என ஸ்வீடிஷ் (Swedish) வானிலை மற்றும் நீர்நிலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி புயல் நிலைமை காரணமாக ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்வீடனில், 40,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நோர்டிக் நாடுகளின் சில பகுதிகளில் பல விமானங்கள், ரயில் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.





