செய்தி

இலங்கையில் அச்சிடப்பட்ட மின்சார பில்களை விநியோகிப்பது நிறுத்தம் : வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில், 1987 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (sms) அனுப்புவதன் மூலமும் இந்த இ-பில்லிங் சேவையில் பதிவு செய்யலாம்.

அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL<blank> மின்சாரக் கணக்கு எண்<blank> மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.

தற்போது தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களிலும், மாத்தறை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களிலும் மட்டுமே மின் உண்டியல்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, அச்சிடப்பட்ட பில்களை முற்றிலுமாக நிறுத்துவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.

எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இச்சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி